கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று இந்து முன்னணியினர் போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி சன்னதி முன்பு நேற்று ராஜபாளையம் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊரடங்கினால் மூடப்பட்ட கோவில்களை தரிசனத்திற்காக விரைவில் திறக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் முன்பு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் நாகராஜன் உள்பட 5 பேர் சமூக இடைவெளியுடன் ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட 12 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோவில் முன்பு இந்து முன்னணி நகர தலைவர் சஞ்சீவி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நகர் பொது செயலாளர் தட்சிணாமூர்த்தி, முத்துலிங்கம், சூரி, ராமகிருஷ்ணன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் ராமச்சந்திரன், ராதா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story