திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை


திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை
x
தினத்தந்தி 11 Jun 2020 10:25 AM IST (Updated: 11 Jun 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் பெரிய அளவிலான வளைவு உள்ளதால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

விபத்துகளை தடுப்பது குறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட உதவி கோட்ட பொறியாளர் ஸ்டெல்லா, உதவி பொறியாளர் பூபதி ஆகியோருடன், திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் ஆலோசனை நடத்தினர். இதில் புறவழிச்சாலை தொடங்கும் பகுதியில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. 

Next Story