காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளர் கைது


காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 10:25 AM IST (Updated: 11 Jun 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

கரூர், 

காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.

டெக்ஸ்டைல் நிறுவன மேற்பார்வையாளர்

கரூர் அருகே உள்ள ராயனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 29). இவர் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெமினாபேகம் (27) என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் அன்பழகன் தனது மனைவி பெமினாவை, தாய் வீட்டிற்கு சென்று ரூ.2 லட்சம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பழகன், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி அடித்ததாக தெரிகிறது. இதனால் காயம் அடைந்த பெமினாபேகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெமினாபேகம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரியா வழக்குப்பதிந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story