கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Jun 2020 11:35 AM IST (Updated: 11 Jun 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 492 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 460 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,

கடலூர் நகரை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். இவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வந்த கீரப்பாளையத்தை சேர்ந்த 36 வயது நபர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 27 வயது நபர், நல்லூரை சேர்ந்த 29 வயது நபர் ஆகியோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 496 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 291 பேருடைய பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story