பெரம்பலூர், அரியலூரில் தனியார் பஸ்கள் மீண்டும் இயக்கம் பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணம் செய்தனர்
பெரம்பலூர், அரியலூரில் தனியார் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இதில் பயணிகள் சமூக இடைவெளி யின்றி பயணம் செய்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர், அரியலூரில் தனியார் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இதில் பயணிகள் சமூக இடைவெளி யின்றி பயணம் செய்தனர்.
தனியார் பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலம் தவிர தமிழகம் முழுவதும் 7 மண்டலங்களில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கு உத்தரவை தளர்த்தியதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அந்தந்த மண்டலத்திற்குள் கடந்த 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து நேற்று முதல் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருச்சி மண்டலத்திற்குள் தனியார் பஸ்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நேற்று முதல் இயக்கப்பட்டன.
பெரம்பலூரில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெரம்பலூர்- கடலூர் மாவட்ட எல்லையான அகரம் சிகூர், தொழுதூர், லெப்பைக்குடிகாடு, ஜெயங்கொண்டம், துறையூர், திருச்சி, பூலாம்பாடி, லால்குடி, அத்தியூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் சமூக இடைவெளியின்றி அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 45 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
அரியலூரில்...
இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் தனியார் பஸ்கள் இயங்கின. இதில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், தா.பழூர், கீழப்பழுவூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் இயங்கின. இதில் அரியலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சில் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். மேலும் பஸ்களில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story