திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த 67 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 7ம் தேதியன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அந்த முதியவர் நேற்று நள்ளிரவு அங்குள்ள 2-வது மாடியில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட பலகையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story