செங்கல் சூளையில் பணிபுரிந்த 463 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு
பெரியபாளையம் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த 463 தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலமான ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில் உள்ள செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 393 பேர் குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அச்சமடைந்த இவர்கள், தங்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதையடுத்து அதிகாரிகளின் ஏற்பாட்டின் பலனாக, 10 பஸ்கள் மூலம் தொழிலாளர்களை திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
மேலும், வடமதுரை ஊராட்சியை சேர்ந்த எர்ணாகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 70 பேரை மண்டல துணை வட்டாட்சியர் மகேந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் 2 பஸ்களில் திருவள்ளூருக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தொழிலாளர்கள் 463 பேரும் நேற்று மாலை சிறப்பு ரெயில் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story