ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
திண்டுக்கலில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் வேலை இழந்து வருமானம் இன்றி அவதிப்படும் ஏழை மக்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொந்த பொறுப்பில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதன்படி நேற்று சேவியர் தெரு, மங்களபுரம், நெட்டுத்தெரு, மார்க்கெட் குமரன் தெரு, சவுடம்மன் கோவில் தெரு, வேணு பிரியாணி கடை அருகில், மக்கான் தெரு காந்திஜி பள்ளி, முருகபவனம், கொட்டப்பட்டி ஏ.டி.காலனி, கொட்டப்பட்டி, புதுப்பட்டி, பூதமரத்துப்பட்டி, பேகம்சாகிபா நகர், சின்னபள்ளபட்டி, பிஸ்மி நகர், ஏ.பி.நகர், அந்தோணியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், பெரியபள்ளபட்டி ஆகிய இடங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு, மைதா, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அ.தி. மு.க. மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story