வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா பரவும் அபாயம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம்


வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா பரவும் அபாயம்   சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம்
x
தினத்தந்தி 12 Jun 2020 1:05 AM GMT (Updated: 2020-06-12T06:35:26+05:30)

வத்திராயிருப்பில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம், கூட்டமாக நிற்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வத்திராயிருப்பு, 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 180-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள வங்கிகளில் ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்கள் முக கவசம் மற்றும் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்கு கிருமிநாசினி, சமூக இடைவெளி பொதுமக்கள் பாதுகாப்பாக உறுதி செய்யப்பட்டன.

கோரிக்கை

தற்போது சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று தினமும் வங்கிகளுக்கு செல்கின்றனர். பொதுமக்களும் அலட்சியப்போக்காக சமூக இடைவெளியே காற்றில் பறக்கவிட்டு பாதுகாப்பின்றி அலட்சிய போக்காகவும் உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றியும், முக கவசங்கள் அணியாமலும் வங்கிகள் மற்றும் மளிகை கடைகள், காய்கறி கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால் கொரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வத்திராயிருப்பில் முக்கிய பஜார் பகுதிகளிலும் வங்கிகள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளித்து சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும் என்றும், பேரூராட்சியின் மூலம் தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story