பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களின் பையில் பணத்தை வையுங்கள் - மத்திய அரசுக்கு பிரிதிவிராஜ் சவான் வலியுறுத்தல்
பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களின் பையில் பணத்தை வையுங்கள் என்றுமத்திய அரசுக்கு முன்னாள் முதல்-மந்திரிபிரிதிவி ராஜ் சவான் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை,
காங்கிரசை சேர்ந்த மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடியில் நேரடி பண பரிமாற்ற சலுகைகளுக்காக மிகக் குறைந்த சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது. நேரடி பண பரிமாற்றத்துக்கு மக்களுக்கு உதவி செய்யப்படாவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழில்கள் முடங்கும். இந்த நிலைமை தொடர்ந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். கடன் வாங்குங்கள், நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஆனால் மக்களின் செலவினங்களை மேம்படுத்த அவர்களின் பையில் பணத்தை வையுங்கள். இந்த நிதியாண்டில் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் வரும் என பிரதமர் மோடி கருதுகிறார்.
ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என சில சர்வதேச கடன் மதிப்பீட்டு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன. பல சர்வதேச நிறுவனங்களும், ரிசர்வ் வங்கியின் கவர்னரும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு எதிர்மறையான வளர்ச்சியை கணித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் இதற்கு நேர்மாறாக சொல்கிறார்.
தற்போது மக்களுக்கு செலவு செய்யும் திறன் இல்லை. தொழில்கள் பெரும் நெருக்கடியில் உள்ளன. எனவே தற்போதைய நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏழைகள், விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள், ஊழியர்கள் உள்ளிட்ட மக்களுக்கு அரசாங்கம் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். இது அவர்களின் செலவு திறனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story