குடிமராமத்து பணிகள்; கலெக்டர், அமைச்சர் ஆய்வு
தேவகோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர் ஆய்வு செய்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் பொதுப்பணித்துறை சார்பில் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டம் மூலம் முதல்-அமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், மணிமுத்தாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் குமார், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிர்லாகணேசன், உதவி பொறியாளர்கள் அழகுராஜா, நூர்லா, கிருஷ்ணா, தாசில்தார் மெர்சியஸ்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவன், புலியடிதம்பம் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story