ஜோலார்பேட்டை அருகே, மூச்சு திணறி 1½ வயது பெண் குழந்தை பலி
ஜோலார்பேட்டை அருகே 1½ வயது பெண் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் திவ்யராணிக்கும் திருப்பத்தூரை அடுத்த மட்டறப்பள்ளி புரத்தார் வட்டத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு நரேஷ்குமார் மனைவியுடன் சண்டை போட்டு வீட்டைவிட்டு வெளியேறி, தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை திவ்யராணி தன் 1½ வயது பெண் குழந்தையை தோள் மேல் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தது. உடனடியாக சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story