ரவுடியை கொன்றவர்களை பழிவாங்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது


ரவுடியை கொன்றவர்களை பழிவாங்க திட்டம் தீட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2020 11:03 AM IST (Updated: 12 Jun 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

ரவுடியை கொன்றவர்களை பழிவாங்க திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த ரவுடி கபிலன் கடந்த 1-ந் தேதி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கபிலனை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக அவரது கோஷ்டியை சேர்ந்த சிலர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஏரியில் நேற்று முன்தினம் ஒன்றுகூடி திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் அந்த கோஷ்டியை வளைத்து பிடித்து கைது செய்ய முயன்றனர்.

கைது

இதில் போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். எளம்பலூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன்(வயது 24), பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜன் மகன் சரவணன்(20), நிர்மலா நகரை சேர்ந்த குமார் மகன் நீலகண்டன்(24), ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்தை சேர்ந்த முருகன் மகன் நவீன்(20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய துறைமங்கலம் கே.கே.நகர் வினோத் மற்றும் ஆலம்பாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மற்றொரு வினோத் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைதான 4 பேரும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story