தேனி அரசு கலை கல்லூரியில் சமூக இடைவெளியின்றி குவிந்த மாணவர்கள்


தேனி அரசு கலை கல்லூரியில் சமூக இடைவெளியின்றி குவிந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 13 Jun 2020 5:00 AM IST (Updated: 13 Jun 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு கலை கல்லூரிக்கு நேற்று நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்தனர்.

உப்புக்கோட்டை, 

வீரபாண்டி அருகே தப்புக்குண்டு செல்லும் சாலையில் தேனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 2 மாதங்களாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்தனர். முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் கேட்டபோது, தேர்வுக்கான ஹால்டிக்கெட் பெறவும், கல்விக்கட்டணம் செலுத்தவும் வந்ததாக தெரிவித்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நிலையில், மாணவ, மாணவிகளை எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி கல்லூரிக்கு வரவழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story