மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தின் காலம் 14 நாட்களாக குறைப்பு மந்திரி ராஜேஸ் தோபே அறிவிப்பு

மும்பை,
மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தின் காலம் 28 நாளில் இருந்து 14 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தெரிவித்தார்.
மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 900 கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.
28 நாட்கள் வரை புதிதாக கொரோனா பாதிப்பு காணப்படாவிட்டால் அந்த கட்டுப்பாட்டு மண்டலம் காலம் முடிவுக்கு வரும்.
இனி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தின் காலம் 14 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ச்சியாக 14 நாட்கள் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படாவிட்டால் அது கொரோனா கட்டுப்பாடு மண்டலம் அல்லாத பகுதியாக அறிவிக்கப்படும். அங்குள்ள தடுப்புகள் அகற்றப்படும். மக்கள் மற்ற பகுதிகளை போல வெளியே செல்ல முடியும். ஊரடங்கு தளர்வுகள் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பொருந்தினாலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் அங்கு அத்தியாவசிய தேவைகளை தவிர எந்த இயக்கமும் அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்

Related Tags :
Next Story