மும்பையில் வெள்ள அபாய எச்சரிக்கை நிலையம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்


மும்பையில் வெள்ள அபாய எச்சரிக்கை நிலையம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Jun 2020 5:52 AM IST (Updated: 13 Jun 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் வெள்ள அபாய எச்சரிக்கை நிலையத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பையில் கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி பலத்த மழை பெய்தது. ஒரேநாளில் பெய்த 944 மி.மீ. மழையால் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. அதன்பிறகு மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி, மத்திய பூலோக அறிவியல் துறையுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நிலையத்தை அமைத்து உள்ளது.


இதை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தனும் கலந்து கொண்டார். பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசும்போது, ‘‘நிசர்கா புயல் குறித்த எச்சரிக்கை 3 நாட்களுக்கு முன்பே விடுக்கப்பட்டது. இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல முடிந்தது.

அதேபோல வெள்ள அபாய எச்சரிக்கை நிலையம் மும்பைக்கு கிடைத்து உள்ள வரம்’’ என்றார்.

Next Story