சாமிதோப்பு அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சாமிதோப்பு அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2020 12:09 PM IST (Updated: 13 Jun 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அருகில் உள்ள செட்டிவிளையில் பூலாங்குளம் உள்ளது. இந்தக் குளக்கரையில் உள்ள மரத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணனிடம் தெரிவித்தனர்.

உடனே அவர் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜாண்கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் பெயர் கண்ணன் (வயது 40), கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் சாமிதோப்பில் ஒரு தங்கும் விடுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, கூலி வேலைகளுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. தொழிலாளி கண்ணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் இந்த குளத்தின் அருகில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story