ஜோலார்பேட்டை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் கருவிகளை திருடிய வாலிபர் கைது
ஜோலார்பேட்டை அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தைக் கொள்ளையடிக்க முடியாததால் அங்கிருந்த மோடம், யூ.பி.எஸ். கருவிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர்நகரில் தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. அதில் 7-ந்தேதி இரவு அடையாளம் தெரியாத மர்மநபர் முகமூடி அணிந்து வந்து, எந்திரத்தில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றார். அவரால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால், ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தை உடைத்து, அதில் வைத்திருந்த மோடம், யூ.பி.எஸ். ஆகியவற்றை கொள்ளையடித்தார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் அந்த வங்கியின் மேலாளர் குமரேசன் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து, அங்குப் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை அடையாளம் கண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி, போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். எனினும், அவரை விடாமல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தனர்.
அவர், ஜோலார்பேட்டையை அடுத்த லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த பரணி (வயது 23) என்றும், 7-ந்தேதி இரவு ஆசிரியர்நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்று, அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், அங்கிருந்த மோடம், யூ.பி.எஸ். ஆகியவற்றை திருடிச் சென்றதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோடம், யூ.பி.எஸ். ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பரணியை ஆஜர்படுத்தி நேற்று அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story