கொடிவேரி குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு டிசம்பர் மாதம் தண்ணீர் வினியோகிக்க எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் உறுதி
கொடிவேரி குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாவும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் எனவும் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னிமலை.
பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ரூ.124 கோடி மதிப்பீட்டில் புதிய கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 கிராம ஊராட்சிகள் பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நான்கு கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகள், குன்னத்தூர் பேரூராட்சி ஆகியவை பயன்பெறுகின்றன.
இந்த திட்டத்துக்காக கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றம் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் திங்களூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து இந்த திட்டத்தால் பயன்பெறும் பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தரைமட்ட தொட்டிகளில் இருந்து குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் குடிநீர் திட்டத்துக்காக திங்களூர் பகுதியில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர்கள் வீரராஜன், பிரேம்குமார், பழனிச்சாமி, அருள்சுந்தரம் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கி கூறியதுடன், இந்த திட்டம் 70 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், வருகிற டிசம்பர் மாதம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆய்வின்போது பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பேரூராட்சி செயல் அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story