அரசு அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இதில் உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் படிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சைல்டு லைன் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டு, வாகனங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குனர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராஜகோபால், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் திருநந்தன், கலெக்டர் அலுவலக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, தேர்தல் பிரிவு தாசில்தார் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கீதாராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலட்சுமி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் பூவதி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், அருள்மொழிதேவன் ஆகியோர் முன்னிலையில் அரசு அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். குழந்தை தொழிலாளர்களை மீட்பது, அவர்களை பணியில் அமர்த்துவோர் மீது நடவடிக்கை எடுப்பது என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story