தாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று
தாராவியில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
ஊரடங்கு காரணமாக வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பி உள்ளனர். குறிப்பாக தாராவி பகுதியில் இருந்து அதிகளவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் ேநாய் பரவல் குறைந்து வருகிறது. இதில் நேற்று தாராவியில் 13 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 43 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 77 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல நேற்று தாதரில் 11 பேருக்கும், மாகிமில் 16 பேருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை முறையே 515, 759 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story