‘நில சீர்திருத்த சட்ட திருத்த முடிவை வாபஸ் பெறவேண்டும்’ - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பசவராஜ் ஹொரட்டி கடிதம்


‘நில சீர்திருத்த சட்ட திருத்த முடிவை வாபஸ் பெறவேண்டும்’ - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பசவராஜ் ஹொரட்டி கடிதம்
x
தினத்தந்தி 15 Jun 2020 5:05 AM IST (Updated: 15 Jun 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

நில சீர்திருத்த சட்ட திருத்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பசவராஜ் ஹொரட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி எம்.எல்.சி. ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் விவசாய நிலத்தை விவசாயிகள் அல்லாதோர் வாங்க முடியாது. இதற்கு கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் இடம் இல்லை. இத்தகைய சட்டம் நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இத்தகைய சூழ்நிலையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று அனுமதிக்க கர்நாடக மந்திரிசபை முடிவு செய்து இருப்பது சரியல்ல.

விவசாய நிலத்தை யார் வேண்டுமானாலும் வாங்க அனுமதித்தால், குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தவர்கள் விவசாயிகளுக்கு பண ஆசை காட்டி நிலத்தை வாங்கி குவிப்பார்கள். இதனால் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு சில ஆண்டுகளில் அந்த பணத்தை தேவையற்ற செலவு செய்துவிட்டு விவசாய கூலிகளாக மாறிவிடுவார்கள்.

உணவு தானிய உற்பத்தி

மேலும் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து, உணவு தானிய உற்பத்தியும் குறைந்துவிடும். நீங்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், நில சீர்திருத்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது. விவசாயிகளின் நிலையை புரிந்துகொண்டு, இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும்.”

இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி தெரிவித்துள்ளார்.

Next Story