கொரோனா தொற்று பரவல்: வேலூர் வியாபாரிகள், போலீசார் 90 பேருக்கு சளிமாதிரி சேகரிப்பு
அரிசி வியாபாரி, பெண் போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வேலூர் மண்டித்தெரு, நேதாஜி மார்க்கெட், லாங்கு பஜார் வியாபாரிகள், போலீசார் 90 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் வேலப்பாடியை சேர்ந்த 38 வயது ஆண் மண்டித்தெருவில் அரிசி கடை வைத்துள்ளார். இவருக்கு 11-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், கடையில் பணிபுரிந்தவர்களுக்கு சளிமாதிரி சோதனை செய்யப்பட்டது.
இதில், அரிசி வியாபாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், கடையில் பணிபுரிந்தவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மண்டித்தெருவில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் நேதாஜி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்யும் முதியவர், வாழை இலை கடையில் பணிபுரியும் ஊழியர், லாங்குபஜாரில் உள்ள துணிக்கடை உரிமையாளர் ஆகிய 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட், லாங்குபஜாரில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை மண்டித்தெருவில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அடுக்கம்பாறை அரசு டாக்டர்கள் பங்கேற்று 50 வியாபாரிகளின் சளிமாதிரியை சேகரித்தனர்.
இதேபோன்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய 30 வயது பெண் போலீசாருக்கு நேற்று முன்தினம் கொரோனா இருப்பது உறுதியானது. அவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் வந்து சென்றதால், அங்கு பணிபுரியும் போலீசார் மற்றும் யோகா வகுப்பில் பங்கேற்ற போலீசார் உள்பட 84 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவு செய்யப்பட்டது. இதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நேதாஜி விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
இதில், வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட 25 பேருக்கும், யோகா வகுப்பில் கலந்து கொண்ட 15 போலீசார் என்று மொத்தம் 40 பேரின் சளிமாதிரியை அரசு டாக்டர்கள் சேகரித்தனர். மீதமுள்ள 44 பேருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளது. இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை (புதன்கிழமை) தெரிய வரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story