வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தடையை மீறி கடைகளை திறந்த சில்லரை வியாபாரிகள் - போலீசார் விரட்டியடித்தனர்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தடையை மீறி கடைகளை திறந்து சில்லரை முறையில் விற்பனை செய்த வியாபாரிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
வேலூர்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் மட்டும் இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வாங்க வேறு பகுதிகளில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதற்கிடையே வேலூர் மண்டித்தெரு அரிசி வியாபாரி, நேதாஜி மார்க்கெட் தேங்காய் வியாபாரி உள்பட பல வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த விற்பனை கடைகள் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மேலும் அங்கு இயங்கி வரும் சில்லரை காய்கறி கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள் நேற்று முதல் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தது.
அதன்படி நேற்று காலை முதல் பள்ளி மைதானத்தில் காய்கறி, பூ, பழ வியாபாரிகள் கடைகள் வைத்தனர். அங்கு பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர். ஆனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தடையை மீறி சில்லரை வியாபாரிகள் கடைகளை திறந்திருப்பதாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சில்லரை வியாபாரிகள் சிலர் கடைகளை திறந்து விற்பனை செய்து வந்தனர். அவர்களை போலீசார் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கு செல்லும்படி விரட்டியடித்தனர்.
மேலும் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி விரட்டினர். தடையை மீறி கடையை திறந்தால் கொரோனா நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

Related Tags :
Next Story