கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சலோமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கொரோனா ஊரடங்கினால் மக்கள் பாதிப்படைந்துள்ளதால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 10 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் கறம்பக்குடியில் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரோனா நிவாரண நிதியாக மத்திய, மாநில அரசுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட விவசாய சங்க தலைவர் பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதியில் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். ஆவுடையார்கோவிலில் கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு வீரையா மற்றும் பலர் கலந்து கொண்டு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரெத்தினவேல் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் 2 பெண்கள் உள்பட 16 பேர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அறந்தாங்கியில் ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 8 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story