திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் ‘போக்சோ’ சட்டத்தில் கொத்தனார் கைது


திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் ‘போக்சோ’ சட்டத்தில் கொத்தனார் கைது
x
தினத்தந்தி 17 Jun 2020 6:36 AM IST (Updated: 17 Jun 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சாலபோகம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 23). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சுவாமிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், பிரகாசுக்கு காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை. இதுதொடர்பாக அவருடைய தாயார், சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார்.

பலாத்காரம்

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவலஞ்சுழி பஸ் நிறுத்தத்தில் அந்த சிறுமி, பிரகாசுடன் நின்று கொண்டிருந்தார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது அந்த சிறுமி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பிரகாஷ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் பிரகாஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story