திருக்கோவிலூர், போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது


திருக்கோவிலூர், போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2020 3:30 AM IST (Updated: 17 Jun 2020 8:54 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 51). இவர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னுடைய நிலத்தில் இருந்த மரத்தை வெட்டிய தனது சகோதரர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் சீனுவாசன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த போலீசாரிடம், நான் புகார் கொடுத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், வழக்குப்பதிவு செய்து ஏன் என் சகோதரரை கைது செய்யவில்லை என கூறி ரகளையில் ஈடுபட்டார். 

அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் குணசேகரன் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் சீனுவாசன் தொடர்ந்து அங்கு ரகளையில் ஈடுபட்டதோடு போலீஸ்காரர் குணசேகரனை மிரட்டி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சீனுவாசனை போலீசார் கைது செய்தனர்.

Next Story