கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணுக்கு வீட்டில் வசிக்க அனுமதி மறுப்பு


கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணுக்கு வீட்டில் வசிக்க அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 17 Jun 2020 8:59 AM IST (Updated: 17 Jun 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

பழனி தட்டான்குளம், கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டில் வசிக்க அனுமதி மறுத்தார்.

பழனி,

பழனி தட்டான்குளம் பகுதியை சேர்ந்த 49 வயது பெண். இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகள் வீட்டில் இருந்து பழனிக்கு திரும்பினார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் பழனிக்கு நேற்று இரவு வந்தார். அப்போது அவருடைய வீட்டின் உரிமையாளர் வீட்டில் வசிக்க அனுமதி மறுத்தார்.

இதையடுத்து சப்-கலெக்டர் உமா உத்தரவின்பேரில் தாசில்தார் பழனிசாமி, சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அவருடைய வீட்டுக்கு சென்று உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த பெண் தங்குவதற்கு வீட்டின் உரிமையாளர் அனுமதி அளித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story