சீனாவை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
சீனாவை கண்டித்து பா.ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டித்தும், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சீன பொருட்களுக்கு தடை விதிக்க கோரி காரைக்குடி ஐந்து விளக்கு அருகே பா.ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் நாராயணன், மாவட்ட செயலாளர் நாகராஜன், நகர பொதுச் செயலாளர் மலைக்குமார், நகர இளைஞரணி செயலாளர் சந்தோஷ் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் காரைக்குடி பர்மா காலனி பஸ் நிலையம் பகுதியில் தெற்கு சாக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. சார்பில் அதன் தலைவர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க.வினர் சீன கொடியை எரிக்க முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர்.
Related Tags :
Next Story