திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தை கலெக்டர் ஆய்வு


திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Jun 2020 10:30 PM GMT (Updated: 21 Jun 2020 3:39 AM GMT)

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலகத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குக் கூடுதல் கட்டடங்கள் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 6 பள்ளி வகுப்பறைகள், ரூ.30 லட்சம் செலவில் தரைத்தளம், மேல் தளத்துக்குடைல்ஸ் கற்கள், மின்சார வசதி, புதிய கழிப்பறைகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டிடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதை, மாவட்ட கலெக்டர் சிவன்அருள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர் அலுவலகங்கள், பொறியியல் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நேர்முக உதவியாளர் அறை அனைத்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறைக்கு திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 50 பேர் விரைவில் பணி அமர்த்த உள்ளார்கள்.

மாவட்ட ஊரக முகமை மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், கிராம ஊராட்சிகள் வளர்ச்சிப்பணிகள் வேகமாக நடைபெறும். அதற்காக திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர்கள் அமரக்கூடிய இடங்கள் ஆய்வு செய்து கம்ப்யூட்டர்கள் வைக்கவேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். விரைவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முழுவீச்சில் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், ஊராட்சிகள் தணிக்கை சுதா, கண்காணிப்பாளர் இளவரசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, உதவி பொறியாளர் ரவி, ராஜேந்திரன், குணசேகரன், அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story