நாமக்கல், வெண்ணந்தூர், ராசிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், வெண்ணந்தூர் மற்றும் ராசிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தம்பிராஜா, பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சா எண்ணெய் விலை பலமடங்கு குறைந்துள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வெண்ணந்தூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காமராஜர் சிலை, வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்தையன் தலைமை தாங்கினார். இதில் செங்கோட்டுவேல், சுரேஷ், அருள்குமார் உள்பட பலர் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் மீனா, நகர பொருளாளர் சலீம், துணை செயலாளர் சாதிக் பாஷா, ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story