ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் கவிழ்ந்தது


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 21 Jun 2020 4:00 AM IST (Updated: 21 Jun 2020 11:23 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் கவிழ்ந்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சன்னாசிபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று உள்ளது. அந்த தொழிற்சாலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்களை மினி பஸ் மூலம் அழைத்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மினி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கோப்பைநாயக்கன் பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது கோப்பை நாயக்கன்பட்டி-கார்த்திகை பட்டி சாலை பஸ்நிறுத்தம் அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் பஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த மேல தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த குருசாமி, சித்ரா, முத்துமாரி, முத்தம்மாள், முத்துமாரி, சுந்தரராஜ், முத்தையா உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லி போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கவிழ்ந்த பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story