அரசு இணையதளத்தில் பதிவு செய்து தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
அரசு இணையதளத்தில் பதிவு செய்து, தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் ஆன்லைன் மூலம் இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றம் பயிற்சி துறையின் மூலம் www.tnp-r-iv-at-e-j-obs.tn.gov.in என்ற தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறலாம்.
தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலி பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த பணிக்கு தகுதியான நபரை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம்.
வேலைவாய்ப்பு
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுனர்களுக்கு இந்த சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் செய்யலாம். எனவே இந்த சேவையை வேலைநாடுனர்களும், வேலை அளிப்போரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story