வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாசுடன் வருகிறார்களா? மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை
வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாசுடன் பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகிறார்களா? என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோய் பரவலை தடுக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வெளிமாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட எல்லைப்பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, இ-பாஸ் பெற்று விழுப்புரம் மாவட்டத்துக்கு பொதுமக்கள் வருகிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story