சென்னையில் இருந்து சாத்தான்குளத்துக்கு வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதார பணிகள் தீவிரம்


சென்னையில் இருந்து சாத்தான்குளத்துக்கு வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Jun 2020 11:00 PM GMT (Updated: 22 Jun 2020 6:15 PM GMT)

சென்னையில் இருந்து சாத்தான்குளத்துக்கு வந்த 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அப்பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சாத்தான்குளம், 

சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடிக்கு சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினரில், அக்காள்-தங்கையான 5 வயது, 1½ வயது சிறுமிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து சிதம்பராபுரத்துக்கு சென்னையில் இருந்து வந்த குடும்பத்தினரில், தாய்-மகளான 26 வயது இளம்பெண், 11 மாத பெண் குழந்தை ஆகிய 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சுகாதார பணிகள் தீவிரம்

மேலும் சென்னையில் இருந்து படுக்கப்பத்து கிராமத்துக்கு வந்த லாரி டிரைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து அமுதுண்ணாக்குடி, சிதம்பராபுரம், படுக்கப்பத்து பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தும், பிளச்சிங் பவுடர் தூவியும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story