மார்வே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
மார்வே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
மும்பை,
மும்பை மலாடு மால்வாணி, ஆஷ்மி நகரை சோ்ந்த சிறுவர்கள் 6 பேர் நேற்று முன்தினம் மாலை மார்வே கடற்கரை பகுதிக்கு சென்றனா். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது அடித்த ராட்சத அலை ஆழமான பகுதியில் நின்று குளித்து கொண்டு இருந்த 2 சிறுவர்களை சுருட்டி இழுத்து சென்றது. அவர்கள் 2 பேரும் கடலில் மாயமானார்கள்.
இதையடுத்து மற்ற 4 சிறுவர்களும் உதவி கேட்டு சத்தம் போட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மால்வாணி போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர்.
உடல்கள் மீட்பு
இந்தநிலையில் அன்று இரவு 8 மணி அளவில் மாயமான அஸ்ரப் முகமது அலி (13) என்ற சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். மற்றொரு 16 வயது சிறுவனின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story