மாயனூர் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
மாயனூர் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குளித்தலை,
மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறக்கப்படும் தண்ணீர் மாயனூர் தடுப்பணை வழியாக கல்லணை செல்லும். மேலும் மாயனூர் தடுப்பணையில் இருந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலையில் உள்ள தென்கரை மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், அந்த தண்ணீர் கல்லணைக்கு சென்ற பிறகும், தென்கரை மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் 2 முறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் தற்போது வரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடக் கோரி, விவசாயிகள் பலர் நேற்று குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதையடுத்து குளித்தலை போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாயனூர் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story