நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2020 4:30 AM IST (Updated: 24 Jun 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நாளை தொடங்குகிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 8 தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திசையன்விளை தாலுகாவுக்கு கலெக்டர், நாங்குநேரிக்கு மாவட்ட வருவாய் அலுவலர், ராதாபுரத்துக்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர், மானூருக்கு நெல்லை உதவி கலெக்டர், அம்பைக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், சேரன்மாதேவிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பாளையங்கோட்டைக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், நெல்லை தாலுகாவுக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அலுவலரிடம் நேரில் கொடுக்க அனுமதி இல்லை.

பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் வருகிற 29-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story