கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சரத்பவாருடன் முதல்-மந்திரி ஆலோசனை


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சரத்பவாருடன் முதல்-மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 24 Jun 2020 4:47 AM IST (Updated: 24 Jun 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் ஆலோசனை நடத்தினார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் காட்டு தீயைவிட வேகமாக பரவி வருகிறது. தற்போது வடக்கு மும்பை பகுதி மற்றும் புனே பகுதிகளில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பிரச்சினை குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவாருடன் ஆலோசனை நடத்தினர்.

வடக்கு மும்பை பிரச்சினை

தாதரில் உள்ள பால்தாக்கரே நினைவு கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் புனே, வடக்கு மும்பை பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story