பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு குறைவு - முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து


பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு குறைவு - முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து
x
தினத்தந்தி 24 Jun 2020 5:25 AM IST (Updated: 24 Jun 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்பு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு, 

கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ்காரர் மஞ்சேஷ், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது துக்கத்தை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீசார், கொரோனா தடுப்பு பணிகளில் முன்களத்தில் நின்று தங்களின் உயிரையே பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள். போலீசாருக்கு என்றே பிரத்யேகமாக ஒரு பரிசோதனை மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயப்பட தேவை இல்லை

கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைவாக உள்ளது. கொரோனா பாதித்த பொதுமக்களோ அல்லது அரசு ஊழியர்களை பயப்பட தேவை இல்லை. உங்களுடன் அரசு எப்போதும் உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story