முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் திருச்சி கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை


முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் திருச்சி கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 24 Jun 2020 4:45 AM GMT (Updated: 24 Jun 2020 4:45 AM GMT)

முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ள திருச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

திருச்சி, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி அருகே உள்ள முக்கொம்பிற்கு சென்று அங்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணை கட்டுமான பணியை பார்வையிடுகிறார்.

முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ள அதிகாரிகளுக்கு நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதார துறை அதிகாரிகளால் கொரோனா தொற்று உள்ளதா? என அவர்களது சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சிவராசுவிற்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.அமல்ராஜ், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழ் பெறப்படும் அதிகாரிகள் மட்டுமே முதல் -அமைச்சருடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Next Story