மும்பையில் கொரோனா பரிசோதனை செய்ய 1 லட்சம் ஆன்டிஜென் கருவிகளை மாநகராட்சி வாங்குகிறது


மும்பையில் கொரோனா பரிசோதனை செய்ய 1 லட்சம் ஆன்டிஜென் கருவிகளை மாநகராட்சி வாங்குகிறது
x
தினத்தந்தி 24 Jun 2020 11:17 PM GMT (Updated: 24 Jun 2020 11:17 PM GMT)

மும்பையில் கொரோனா பரிசோதனை செய்ய 1 லட்சம் ஆன்டிஜென் கருவிகளை மாநகராட்சி வாங்குகிறது. இதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு தெரியும்.

மும்பை,

மும்பையில் கொரோனா பரிசோதனை செய்ய 1 லட்சம் ஆன்டிஜென் கருவிகளை மாநகராட்சி வாங்குகிறது. இதன் மூலம் 30 நிமிடத்தில் முடிவு தெரியும்.

நாட்டின் மற்ற நகரங்களை விட கொரோனாவால் மும்பை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகம் நிறைந்த தாராவி குடிசை பகுதியில் இந்த நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல நகரத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி மும்பையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், இதற்காக 1 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளை வாங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தற்போது கொரோனாவை கண்டறிய ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு ஆன்டிஜென் எனப்படும் புதிய பரிசோதனை கருவிகளை வாங்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.

ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் ஒப்பீட்டளவில் வேகமாக இருக்கும். இந்த கருவியின் மூலம் 15 அல்லது 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிந்துவிடும். அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும்.

மும்பையில் 35 முக்கிய தனியார் ஆஸ்பத்திரிகளும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆன்டிஜென் சோதனை கருவிகளை வாங்கும்படி மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story