இலங்கையில் இருந்து ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் கடலோர காவல்படை கப்பல் நிறுத்தி வைப்பு


இலங்கையில் இருந்து ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் கடலோர காவல்படை கப்பல் நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 25 Jun 2020 4:00 AM IST (Updated: 25 Jun 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

கடத்தல்காரர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஊடுருவலை தடுக்க தனுஷ்கோடியில் ஹோவர்கிராப்ட் கப்பலை நிறுத்தி வைத்து, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்து செல்வதோடு தங்ககட்டிகளும் ராமேசுவரம் கடல் வழியாக தமிழகத்திற்கு கடத்தி கொண்டுவரப்படுகின்றன. ராமேசுவரம் கடல் பகுதியில் இருந்து கடல்அட்டை மற்றும் போதை பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதும் நடக்கிறது.

இந்த நிலையில் கொரோனாவால் இலங்கையிலும் அதிக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் அகதிகள், கடத்தல்காரர்கள் போல ஊடுருவாமல் இருக்கவும் ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கவும் கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட் கப்பல் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் நிறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story