மனவளர்ச்சி குன்றிய பெண்ணை: பாலியல் பலாத்காரம் செய்த தந்தை- மகன் குண்டர் சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை- மகன் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவரது மகன் காளிதாஸ் என்ற கார்த்திக்(22). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மேலும் அவருக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அந்த பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிந்து பலாத்காரத்தில் ஈடுபட்ட குமார் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில் தந்தை மகன் இருவரையும் திருச்சி மண்டல டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சிறையிலிருந்த தந்தை- மகன் இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை வழங்கினர்.
Related Tags :
Next Story