ஈரோடு மாவட்டத்தில், புதிதாக 4 பேருக்கு கொரோனா - பாதிப்பு 89 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 89ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைவிரித்து உள்ளது. தினசரி பாதிப்பு கண்டறியும் மாவட்டங்கள் பட்டியலில் ஈரோடு மாவட்டமும் இடம் பிடித்து வருகிறது. நேற்று முன்தினம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக இருந்தது.
அதில் 2 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களது பெயர்கள் ஈரோடு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டது. எனவே மொத்த பாதிப்பு 85 ஆக இருந்தது. நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 55 வயது பெண், பவானி பகுதியை சேர்ந்த 24 வயது ஆண், கொடுமுடி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் மற்றும் 45 வயது பெண் ஆவார்கள். இதில் 3 பேர் ஏற்கனவே பாதிப்பு அடைந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர்கள் 4 பேருடன் சேர்த்து எண்ணிக்கை 89 ஆக உயர்ந்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 89 பேரில் 72 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்துள்ள நிலையில் மீதமுள்ள 15 பேர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினந்தோறும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story