சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது- 2 உதவி கமிஷனர்கள் குணம் அடைந்தனர்
சென்னை போலீஸ்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீசார் வரை கொரோனா பிடியில் சிக்கி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை போலீஸ்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீசார் வரை கொரோனா பிடியில் சிக்கி வருகிறார்கள். சென்னை போலீசில் ஏற்கனவே 976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 29 போலீசார் புதிதாக கொரோனா பிடியில் சிக்கினார்கள். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு 1,005 ஆக உயர்ந்தது. புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் இடம் பெறவில்லை.
மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, மத்திய குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமூண்டிஸ்வரி ஆகியோர் உள்பட 28 போலீசார் பூரண குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story