பெரம்பலூர், அரியலூரில் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கம் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது
பெரம்பலூர், அரியலூரில் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 5-வது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பில், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் மண்டலத்துக்குள் பொது போக்குவரத்து தொடங்கலாம் என்றும், அதன்படி 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்கியது. இந்நிலையில் தற்போது அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க தமிழகத்தில் மண்டலத்திற்குள்ளான பொது போக்குவரத்தையும் ரத்து செய்து விட்டு, 26-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 30-ந் தேதி வரை மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்களை இயக்கவும், மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டது.
கூட்டம் குறைவாக காணப்பட்டது
அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பஸ்கள் இயங்கின. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைகள் மூடப்பட்டன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரிடம் இ-பாஸ் உள்ளதா? என்று போலீசார் கண்காணித்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லை வரை 20 புறநகர பஸ்களும், 15 டவுன் பஸ்களும் என மொத்தம் 35 பஸ்கள் இயக்கப்பட்டன.
பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் பஸ்கள் அல்லிநகரத்திலும், திருச்சி மாவட்டம் துறையூர் செல்லும் பஸ்கள் அடைக்கம்பட்டி வரையிலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் பஸ்கள் உடும்பியம் வரையிலும், திருச்சி செல்லும் பஸ்கள் பாடாலூர் வரையிலும், கடலூர் மாவட்டம் தொழுதூர் செல்லும் பஸ்கள் திருமாந்துறை சுங்கச்சாவடி வரையிலும் இயக்கப்பட்டன.
இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வெளி மாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மாவட்டத்திற்குள் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இ-பாஸ் இருந்தால் மட்டுமே...
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஒரு சில பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அரியலூர்- தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள மதனத்தூர் சோதனை சாவடியில் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டிகள் இ-பாஸ் இல்லாமல் கும்பகோணம் செல்ல முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்து திரும்பினர். தா.பழூர் பகுதியை பொருத்தவரை அருகில் உள்ள முக்கியமான மருத்துவ மற்றும் வணிக நகரமாக விளங்கும் கும்பகோணம் செல்ல இ-பாஸ் நடைமுறையை தளர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்கள் மதனத்தூர் கிராமத்தோடு நிருத்தப்பட்டது. கும்பகோணம் பகுதிக்கு செல்ல விரும்பிய பயணிகள் மதனத்தூரில் இறங்கி அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று நீலத்தநல்லூர் கிராமத்தில் இருந்து கும்பகோணம் பஸ்சில் பயணித்தனர். சோதனை சாவடியை நடந்து கடந்த பயணிகளிடம் அதிகாரிகள் இ-பாஸ் கேட்கப்படவில்லை.

Related Tags :
Next Story