மாவட்ட செய்திகள்

கறிக்கடைகள், மீன் மார்க்கெட் மூடல் எதிரொலி- ஓட்டல்களில் அசைவ உணவுகளுக்கான ஆர்டர்கள் குவிகிறது + "||" + Orders for non-vegetarian food are accumulating in hotels

கறிக்கடைகள், மீன் மார்க்கெட் மூடல் எதிரொலி- ஓட்டல்களில் அசைவ உணவுகளுக்கான ஆர்டர்கள் குவிகிறது

கறிக்கடைகள், மீன் மார்க்கெட் மூடல் எதிரொலி- ஓட்டல்களில் அசைவ உணவுகளுக்கான ஆர்டர்கள் குவிகிறது
கறிக்கடைகள், மீன் மார்க்கெட்கள் மூடப்பட்டிருப்பதால் ஓட்டல்களில் இறைச்சி உணவுகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகிறது.
சென்னை, 

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கோழி, ஆட்டிறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்கள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே கொரோனா பீதியில் வீட்டிலேயே பொழுதை கழிக்கும் மக்களுக்கு தற்போது விரும்பிய உணவுகளும் கிடைக்காமல் போனதால் வேதனை அடைகிறார்கள்.

குறிப்பாக அசைவ பிரியர்கள் இறைச்சி உணவு சாப்பிட முடியாமல் தத்தளிக்கிறார்கள். தெருக்களில் வாகனங்களில் வைத்து மீன் கொண்டு வந்து விற்பனை செய்வோரையும் பார்க்க முடிவதில்லை. சில பகுதிகளில் உயிருடன் கோழி மற்றும் காடைகள் அவ்வப்போது சிலர் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். கூடுதல் விலைக்கு கோழி மற்றும் காடைகளை விற்றும் லாபம் பார்த்து விடுகிறார்கள். ஆனாலும் தோல் உரித்து கோழிக்கறியை சமைப்பது பெரிய வேலையாக தெரிவதால் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை.

அசைவ உணவுகளுக்கு மவுசு

தற்போது அசைவ பிரியர்களின் ஒரே ஆறுதலாக இருப்பவை ஓட்டல்கள் மட்டுமே. பெரும்பாலான சிறிய ஓட்டல்களிலும் இறைச்சி உணவுகள் கிடைப்பதில்லை. பெரிய ஓட்டல்களில் மட்டுமே இறைச்சி உணவுகள் கிடைக்கின்றன. பெரும்பாலான பெரிய ஓட்டல்களில் இறைச்சியை கெடாமல் பாதுகாத்து பயன்படுத்தும் வசதி உள்ளதே இதற்கு காரணமாகும்.

இதனால் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையிலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அசைவ உணவுகளை வழங்க முடிகிறது. ஓட்டல்கள் அருகில் வசிப்பவர்கள் போலீசாரின் கண்ணில் சிக்காமல் ஓட்டல்களுக்கு சென்று விரும்பிய இறைச்சி உணவை வாங்குகிறார்கள். பெரும்பாலானோர் மதியத்துக்குள் ஆன்-லைன் மூலமாக ஆர்டர் கொடுத்து உணவுகள் பெற்று சாப்பிட்டு வருகிறார்கள். அசைவ பிரியர்களின் ஆர்வம் காரணமாக ஓட்டல்களில் அசைவ உணவுகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகிறது.

இதனால் அசைவ ஓட்டல்களில் எப்போதுமே ஓரளவு மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆன்-லைன் வழியாக ஆர்டர்கள் பெற்று உணவு வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டோரை அதிகமாகவே பார்க்க முடிகிறது. சில ஓட்டல்களில் உணவுகளின் விலையும் லேசாக உயர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் : 2½ மாதத்துக்கு பிறகு ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் முறை தொடங்கியது
கடலூர் மாவட்டத்தில் 2½ மாதத்துக்கு பிறகு ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் முறை நேற்று தொடங்கியது.
2. நெல்லையில் ஓட்டல்களை கண்காணிக்க 10 குழுக்கள் அமைப்பு
ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று கண்காணிக்க நெல்லையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
3. விழுப்புரத்தில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்
விழுப்புரத்தில் இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. ஓட்டல்கள், விடுதிகள், மால்களுக்கு அனுமதி: கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு கோவில்கள் இன்று முதல் திறப்பு
கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கோவில்கள், ஓட்டல்கள், மால்கள், விடுதிகள் திறக்கப்படுகிறது. அங்கு கொரோனா பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
5. சேலம் மாவட்டத்தில் ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது.