கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2020 4:27 AM IST (Updated: 27 Jun 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் இறந்ததையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருமானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சாமிதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story