மாவட்ட செய்திகள்

தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Woman committed suicide by hanging herself

தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே உள்ள மத்தகிரி ஊராட்சி, குள்ளரெங்கம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இதனால் சாந்தி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில், கடந்த 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாந்திக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமானும் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
சின்ன காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
2. அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை
தாம்பரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.
3. நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
4. கிரிக்கெட் விளையாட்டில் தகராறு; பெண் அடித்துக்கொலை கணவன்-மனைவி-மகன் மீது வழக்கு
பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.